The religious education board of CACM has launched a program for the Sunday school kids of our congregations making greetings cards to their fathers to mark the international Father’s Day, June 20, 2021. This is the first program conducted after religious education board go online recently. Within a short announcement and preparation, hundreds of children took part with much enthusiasm. Kids have expressed their love to their fathers through beautiful creative handicrafts. Beautiful colorful paintings, artistic creations, meaningful verses have indicated the love of the kids on their father. Some creations expressed the trauma of the kids who haven’t experienced fathers love in the context of the war and domestic violence. If you watch these creations, you will recognize that such programs should be continued in future in order to ventilate feelings and to progress in happy life of the kids who live with depression under the current Covid-19 lock down situation.

கடந்த 20.06.2021 சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு எமது திருச்சபைகளின் ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளிற்கான தந்தையர் தின வாழ்த்து மடல் ஆக்கத்தை செய்வதற்கான வாய்ப்பை சி.எ.சி.எம் சமயக்கல்விக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்பாக சி.எ.சி.எம் சமயக்கல்விக் குழு, ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளிற்கான விசுவாச கற்றல் செயற்பாடுகளை இணைய ஊடகங்கள் வாயிலாக ஆரம்பித்த பின்னரான முதலாவது செயற்பாடு இதுவாகும். குறுகிய கால ஒழுங்குபடுத்தலில் நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இதில் ஆர்வத்தடன் பங்குபற்றினர்.

தமது தந்தையுடனான அன்பின் உறவை பிள்ளைகள் தம் வயதின் திறமைகளுக்கு ஏற்ப அழகான ஆக்கச்செயற்பாடுகளாக வெளிக்காட்டியுள்ளனர்.

அழகானதும், வண்ணமயமுமான ஒவியங்கள், கலைநயமான ஆக்கங்கள், கருத்தாழமிக்க வரிகள் என பிள்ளைகளின் ஆக்கங்கள் பார்க்கும் போது உண்மையில் இது பிள்ளைகள் தம் தந்தையுடனான பாச பிணைப்பின் சுயவெளிப்பாடகவே காணத் தோன்றுகின்றன.

கடந்த கால போர் மற்றும் குடும்ப வன்முறைகளினால் தம் தந்தையின் பாசம் அறியாத பிள்ளைகளினது உள வெளிப்பாட்டையும் சில ஆக்கங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

தற்பொதைய சமூக முடக்க நிலையில் பல்வேறு மன அழுத்தங்களுடன் வாழும் எம் பிள்ளைகளின் மகிழ்ச்சிகரமான வாழ்வின் முன்னேற்றத்திற்கும், உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கும் இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் தோன்ற இவ் வண்ணமயமான வாழத்துமடல்களை பாருங்கள்.

error: Content is protected !!