அமைதியைத் தேடுது இதயம் – எம்
ஆண்டவரே இங்கு உதவும்
பாரினில் எங்கும் துயரம்
பரமனே இப்போது உதவும்

விண்ணவவர் பாடிய அமைதி – எம்
மண்ணிலே வேண்டம் அமைதி
இறைவா இறைவா தருவாய் அமைதி

ராமாவிலே கேட்ட அழுகுரல் – இன்று
ஈழத்திலே கேட்குதந்த குரல்
இராகேலின் விழிகளில் கண்ணீர் – எம்
தாயவள் விழியயிலோ செந்நீர் – இறைவா

எங்களின் சுதந்திர பூமி — சுடு
காடாக மாறுதே சாமி
நாங்கள் சுவாசிக்கக் காற்று — இன்று
மறுக்கப்படுகுதே எமக்கு – இறைவா

உலகியல் வாழ்வே மாயம் – இங்கு
தொலைந்து போனது மனிதம்
நீதியும் மலர்ந்திட நீயும் – இன்று
எமக்காய் பிறந்திட வேண்டும் – இறைவா

Amaithiyai theduthu ithayam
Aandavare ingu uthavum
Parinil engum thuyaram
paramane ippothu uthavum

Vinnavar padiya amaithi – Em
Mannile vendum amaithi
Iraiva iraiva tharuvai amaithi

Ramavile Ketta alukural – Indru
Ealathile ketkuthantha kural
Rahelin vizhikalil kanneer – Em
Thayavaal vizhiyilo Senneer –  Iaiva

Engalin suthanthira poomi – Sudu
Kadaha maaruthe sami
Nangal swasikka kaatru – Indru
Marukkappadukuthe emakku – Iraiva

Ulahiyal Vazhve mayam – Ingu
Tholainthu Ponathu manittham
Neethiyum Malarnthida neeyum – Indru
Emakkai piranthida vendum – Iraiva