1. கலங்காதே என்ன நேர்ந்தாலும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
செட்டைகள் மறைவில் வந்திடுவாய்
கர்த்தர் பார்த்து கொள்வார்

கர்த்தர் பார்த்து கொள்வார்
உன் காரியம் உன் கவலை
யாவும் அவர் அறிவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்

2. உந்தனின் தேவை யாவையும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
நம்பிடுவாய் திருப்தி செய்குவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்

3. கவலை தனிமை ஆயினும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
மெய் சமாதானம் ஈந்திடுவார்
கர்த்தர் பார்த்து கொள்வார்

4. சோதனையால் சோர்ந்து போனாயோ
கர்த்தர் பார்த்து கொள்வார்
சாய்ந்திடு கர்த்தர் தம் மார்பினில்
கர்த்தர் பார்த்து கொள்வார்