காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்

1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே

2. பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய்
இதுவே உன் பாக்யம் என் இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே

3. சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே

4. பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நான் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே